இனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்!

Home > தமிழ் news
By |
இனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்!

சென்னையைப் பொருத்தவரை மெட்ரோ சிட்டி என்பதாலேயே போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண நேரங்களை விடவும் பீக்-டைம் எனப்படும் அலுவலக நேரம் மற்றும் அலுவலகம் முடியும் நேரங்களில் அதிகம்.

 

அதுசமயம்தான் மெட்ரோ ரயில் திட்டம் பலருக்கும் உதவியாக வந்தது. சற்றே அதிவேகமாக செல்லக் கூடியது என்பதால் விரைவாக செல்வதற்கு மெட்ரோ உதவியது.

 

தற்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் நேரமான பீக்-ஹவர்ஸில் 10 நிமிடத்திற்கு பதிலாக 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் 20 நிமிடங்களுக்கு பதிலாக 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

METRO, CHENNAI, CHENNAIMETROTRAIN, METRORAILWAY