2 நாளைக்கு ஃப்ரீ.. சென்னை மெட்ரோ ரயிலில் பறக்கலாம்.. அசத்தலான ஆஃபர்!

Home > News Shots > தமிழ் news
By |

சென்னை மெட்ரோ ரயில் சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

2 நாளைக்கு ஃப்ரீ.. சென்னை மெட்ரோ ரயிலில் பறக்கலாம்.. அசத்தலான ஆஃபர்!

பல வருடங்களாக நிகழ்ந்த மெட்ரோ திட்டம் நிறைவடைந்த பிறகு பெருவாரியான மக்கள் அவசர காலங்களில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றுள் வழக்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பரங்கிமலை என இரு வழித்தடங்களில் ஏர்போர்ட் முனையம்வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தில் இயங்கும் புதிய ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொளி மூலம் தொடங்கிவைத்தார். இனி இந்த பாதையில் சேவைக்கு வரவுள்ள ரயிலானது குறிப்பிட்ட நேரங்களில் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தின் முழுமையான ரயில் கட்டணம் 40 ரூபாயாக இருக்கும் என தெரிகிறது.

இந்த பணிகள் முழுமையாக முடிந்ததை அடுத்து மெட்ரோ ரயிலின்  வழித்தடங்களில் இன்றும் நாளையும் பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நேரம் என்பதால் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான விண்ணப்பத்தை தற்போதே தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

NARENDRAMODI, CHENNAI METRO