12 வயது சிறுமி பலாத்கார வழக்கில், 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம்!

Home > தமிழ் news
By |

கடந்த வருடம் அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறை சென்ற 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

12 வயது சிறுமி பலாத்கார வழக்கில், 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம்!

சென்னை அயனாவத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து, 12 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுமியை மிரட்டி, சுமார் 17 நபர்கள்  6 மாதங்களாக பாலியல் ரீதியாக பலமுறை துன்புறுத்தினர்.

பின்னர்  மருத்துவர்கள் மூலம் இதையறிந்து அதிர்ச்சியான  சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த கொடுஞ்செயலைச் செய்த 17 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர் .

அந்த சயமத்தில் இந்த சம்பவம் பல அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது . அதுமட்டுமல்லாமல், இந்த 17 பேருக்கும் ஆதரவாக யாரும்  வாதாட போவதில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

இந்நிலையில் தற்பொழுது இந்த 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது  சென்னை உயர் நீதிமன்றம் .

MADRASHIGHCOURT, MINOR GIRL, AYANAVARAM, GANGRAPE, GOONDASACT