'சென்னையில வெள்ளம் வந்தா'.. அதிகம் பாதிக்கப்படப்போறது இவங்க தானாம்!
Home > தமிழ் newsசென்னையில் 306 இடங்கள் வெள்ளப்பெருக்கின்போது பாதிப்படையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதில் 37 இடங்கள் மிகவும் பாதிப்படையும் பட்டியலில் இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த ஆய்வை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்தியுள்ளது.
டிசம்பர் 2015 சென்னை பேரிடருக்கு பிறகு இந்த வரிசைப்படுத்தும் பணி நடைப்பெற்றது.இதில் மிக,மிக பாதிப்படையும் இடங்கள்,மிகவும் பாதிப்படையும் இடங்கள்,மிதமான பாதிப்படையும் இடங்கள் மற்றும் குறைவான பாதிப்படையும் இடங்கள் என தண்ணீர் தேங்கி நிற்கும் அளவை வைத்து வரிசைப்படுத்திள்ளது தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்.
மிக கனமழையின் போது தண்ணீரின் அளவு 5 அடிக்கும் மேல் இருந்தால் மிக மிக பாதிப்படையும் இடங்கள் எனவும்,தண்ணீரின் அளவு 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் மிகவும் பாதிப்படையும் இடங்கள் எனவும், தண்ணீரின் அளவு 2 முதல் 3 அடி இருந்தால் மிதமான பாதிப்படையும் இடங்கள் எனவும் மற்றும் 2 ஆடிக்கு கீழ் இருந்தால் குறைவான பாதிப்படையும் இடங்கள் எனவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வின் படி 37இடங்கள் மிக மிக பாதிப்படையும் இடங்கள் எனவும் அதில் 24 இடங்கள் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட இடங்கள் ஆகும்.அதில் கிண்டி,வேளச்சேரி,திருவான்மியூர் மற்றும் அடையாறு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
மேலும் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ஆழ்வார் பேட்டை,மயிலாப்பூர்,சந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் போன்ற பகுதிகள் மிக மிக பாதிக்கப்படும் இடங்களாகவும் இங்கு 5 அடிக்கும் மேல் தண்ணீரின் அளவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வளசரவாக்கம் மண்டலத்தில் 26 இடங்கள் வெள்ளத்தில் பாதிப்படையும் இடங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.