'உயிரைப் பாதுகாக்க'... சில ஆயிரம் செலவு பண்ண மாட்டீங்களா?
Home > தமிழ் newsகுற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.குற்றங்கள் நடத்த பின்பு குற்றவாளிகளை மிக விரைவாக கண்டுபிடிக்க இந்த கேமராக்கள் மிகவும் உதவியாக உள்ளன.
இந்தநிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை மாநகரம் முழுவதையும், சிசிடிவி கேமராக்கள் மூலம் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளிலும் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டுவருகிறார்கள்.
இதன்தொடர்ச்சியாக சிசிடிவி கேமராவை பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளில் பொருத்துவதன் அவசியம் குறித்து, நடிகர் விவேக் அவர்கள் நடித்து வெளியிட்ட "மூன்றாவது கண்" என்ற விழிப்புணர்வு குறும்படம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் சிசிடிவி கேமராவை பொருத்துவதின் அவசியம் குறித்து மிக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.