இனிமேல் சைபர் கிரைமில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை !

Home > தமிழ் news
By |
இனிமேல் சைபர் கிரைமில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை !

சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது கடுமையாக அதிகரித்து வருகின்றது.வாட்ஸஅப் மற்றும் முகநூல் மூலமாக தவறான தகவல்கள் அதிகமாக அனுப்பப்படுகிறது.இது பல குற்றங்கள் நடைபெற வழிவகை செய்கிறது.

 

இந்நிலையில் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்களைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதுபோன்ற இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

வாட்ஸ்அப் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

மேலும் சைபர் கிரைம் குற்றங்ககளில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .