Looks like you've blocked notifications!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) முழுஅடைப்புப் போராட்டம் நடக்கிறது.

 

இந்தப் போராட்டத்துக்கு பாமக, தமாகா, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

 

இந்தநிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு 80% பேருந்துகள் இயங்காது என, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

இதுதொடர்பாக தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாளை நடைபெறும் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படாது என கூட்டாக அறிவித்தனர்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS