3 மாதங்கள் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்காவிட்டால் ரேஷன்கார்டினை ரத்து செய்யும்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது.இதில் ரேஷன் பொருள்களை முறையாக மக்கள் வாங்குகிறார்களா? என்பதை மக்கள் கண்காணிக்க வேண்டும், என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பஸ்வான், ''ரேஷன் பொருள்கள், உரிய பயனாளிகளுக்கு முறையாகச் சென்று சேர்கிறதா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் பட்டினிச் சாவு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
OTHER NEWS SHOTS