பிழைப்பு தேடி சென்ற நாட்டில் திடீரென கோடீரஸ்வரர் ஆன மெல்ஹிக்!

Home > தமிழ் news
By |
பிழைப்பு தேடி சென்ற நாட்டில் திடீரென கோடீரஸ்வரர் ஆன மெல்ஹிக்!

பலரும் வெளிநாடுகளுக்கு சிறுசிறு கனவுகளுடன் செல்வர். அநேகமானோர் ஓரளவிற்கு பணம் சம்பாதித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து பெரிய பணக்காரர் ஆகிவிட நினைப்பது உண்டு. ஆனால் ஏதோ ஒரு வேலையை செய்யச் சென்ற நாட்டிலேயே பெரும் செல்வந்தர் ஆவதெல்லாம் அத்தனை சாமானியம் அல்ல. இருப்பினும் ஆப்ரிக்காவை சேர்ந்த இளைஞர்  ஒருவர் இதனை சாத்தியமாக்கியுள்ளார்.

 

28 வயது மதிக்கத்தக்க மெல்ஹிக் எனும் இந்த இளைஞர் இரண்டு வருடத்துக்கு முன்னால் கனடாவின் வின்னிபெக் நகருக்கு வேலை நிமித்தமாக குடும்பத்துடன் புலம் பெயர்ந்துள்ளார்.  சில நாட்கள் வேலை தேடி அலைந்தபோது 2 லாட்டரி சீட்டுகளை அவர் வாங்கியுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வாழ்க்கையை அதிர்ஷ்டம் ஆட்கொண்டது.

 

ஆம், பின்னர் அந்த 2 லாட்டரி சீட்டுகளுக்கும் சேர்த்து குலுக்கல் முறையில் சுமார் 2.7 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து பெரும் செல்வந்தராகவே மாறிவிட்டார். இந்த பணத்தைக் கொண்டு, வீடு, வாகனங்கள் என அத்தியாவசிய ஆடம்பர தேவைகள் அத்தனையையும் பூர்த்தி செய்துகொண்ட மெல்ஹிக் அடுத்து ஆங்கிலம் கற்க விருப்பப் படுவதாகவும், ஏதேனும் சுய தொழில் செய்யும் முயற்சியில் இறங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து லாட்டரி சீட்டு கம்பெனி நிறுவனர் கூறும்பொழுது, மெல்ஹிக்கின் அதிர்ஷ்டம்தான் அவருக்கு இந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளதே தவிர, யாரும் சந்தேகப்படும்படியான எதுவும் இதன் பின்னால் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

CANADA, IMMIGRANT, MELHIG, MILLIONAIRE