’காதல் தீயே’.. கனடாவின் முதல் தமிழ் சேனல் உருவாக்கிய ஆல்பம்!

Home > தமிழ் news
By |
’காதல் தீயே’.. கனடாவின் முதல் தமிழ் சேனல் உருவாக்கிய ஆல்பம்!

ஒரு நிச்சயமான தன்மையில், தன் கருத்தை ஓங்கிச் சொல்லும் திறன் படைத்த பாடகி வைஷாலியின் குரல், ‘காதல் தீயே’ எனும் வரிகளை பாடத் தொடங்குகிறது. வெகுவேகமாக பாடலின் உச்சலயத்துக்கு இட்டுச்செல்லும் இசை, அங்கு சென்று ஸ்டைலோ மன்னவனின் ’ராப்’ வரிகளில்தான் ஆசுவாசம் கொள்கிறது. ரசிக்கும்படியான ஒரு பாடல் இளசுகளின் ரசனையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. 

 

அதுதான் பிரதீப் கனகசபை இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் தீயே. இந்த பாடலை  ஆல்ஃபா சம்திங் எழுத, பிரவின் மணி இசையமைத்துள்ளார்.  ஒலி, ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பாக்கங்களை வைல்ட் ரேபிட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் செவந்த் ஹெவன் மீடியா வொர்க்ஸ் இணைந்து உருவாக்கியுள்ளன.

 

கனடாவில் உருவான முதல் தமிழ் தொலைக்காட்சி tvi. 2001-ம் ஆண்டு உருவான tvi மற்றும் 2003-ம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெற்ற கனடிய பல்கலாச்சார வானொலியான CMR பன்முகம் கொண்ட கலைஞர்களை தங்கள் ஊடகத்தின் வாயிலாக உருவாக்கியது.  இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக StarSearch-ன் ஊடாக Cmr-tvi வளர்த்தெடுத்த கனடா,மலேஷியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் கலைஞர்களை  Cmr-tvi-ன் நட்சத்திரங்களாக ’காதல் தீயே’ எனும் இந்த தனித்தொகுப்பு அல்லது ஆல்பம் பாடலின் வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளது.


’என் நிறங்களை என்னில் தீட்டினாய்.. பெண் விரலினில் வீணை மீட்டினாய்.. பொன் சிலையென மாற்றினாய்’ என்று மனதை வருடும் மெலோடிக்கல் வரிகள் ‘பீட்’ மோடில் கொடுக்கப்பட்டுள்ள இப்பாடல் காட்சியை ஒரு முறை பார்த்தாலே போதும், அப்புறம் ‘ரிப்பீட்’ மோடில், உங்கள் விருப்ப பிளேலிஸ்டில் இடம் பிடித்துவிடும்.!

TVI, CMRTVI, KADHALTHEEYE, ALBUMSONG, MUSIC, CANADATAMILCHANNEL, STARSEARCH, TAMILVISION, VAISHALI, PIRATHEEP KANAGASABAI