இதென்னடா திருடனுக்கு வந்த சோதனை.. வைரலாகும் வீடியோ!

Home > தமிழ் news
By |
இதென்னடா திருடனுக்கு வந்த சோதனை.. வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் கோலரடா நகரில் உள்ள அரோரா எனும் இடத்தில் இருக்கும் பிரபலமான  இ-சிகரெட் கடை ஒன்றில் திருடச் சென்ற திருடனுக்கு ஏற்பட்ட சோதனை, வீடியோ கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது.

 

அந்த ஷாப்பில் ஒரு பெண் ஊழியர் கம்ப்யூட்டரின் முன் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது ஸ்டைலாக தொப்பி, க்ளாஸ் அணிந்தபடி,  நடந்து வந்த அந்த திருடர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார். நீட்டியவுடனேயே அந்த துப்பாக்கி மேசைக்கு எதிர் புறம் தவறி விழுந்து கடைக்கார பெண் ஊழியர் கையில் கிடைத்துவிடவே, அவசரத்தில் செய்வதறியாது முன்னால் இருந்த கண்ணாடி மேசை மேல் ஏறிச்செல்ல முயன்ற திருடர் அணிந்திருந்த பாண்ட் அவிழ்ந்து விழ, சற்றும் தாமதிக்காமல் ஓடத் தொடங்குகிறார்.

 

போலீசாரின் விசாரணைக்கு பிறகு வெளியிடப்பட்ட இந்த சிசிடிவி வீடியோ வெளியானவுடனேயே பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

 

ROBBERY, BURGLAR