'மணமகன் தப்பி ஓடியதால்'.. மாமனாரை திருமணம் செய்த மணமகள்!
Home > தமிழ் news
மணமகன் காதலியுடன் தப்பி ஓடியதால் மணமகள் மாமனாரை திருமணம் செய்துகொண்ட அவலம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த சமஷ்டிபூரைச் சேர்ந்த ரோஷன் லால்(65) என்பவரின் மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சுவப்னா(21) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் மணநாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, மணமகன் தனது காதலியுடன் தப்பி ஓடிவிட்டார்.இதனால் இரு வீட்டினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே திருமண விழா ரத்து செய்ய மணமகனின் பெற்றோர் முயற்சித்தனர். ஆனால், ஏற்பாடு செய்த திருமணம் நின்று விடக்கூடாது என்று கெளரவம் பார்த்த மணபெண்ணின் வீட்டார், மணமகனின் தந்தையை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி சுவப்னா தனது மாமனார் ரோஷன் லாலை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.