BGM BNS Banner

Watch Video: 'செமத்தியா அடிவாங்கி.. மொத்த டீமையும் காப்பாத்திய நாய்!

Home > தமிழ் news
By |
Watch Video: 'செமத்தியா அடிவாங்கி.. மொத்த டீமையும் காப்பாத்திய நாய்!

புட்பால் மேட்சைப் பொறுத்தவரை பெனால்டி கோல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதில் சொதப்பினால் அவ்வளவு தான் ஒட்டுமொத்த டீம் மட்டுமல்ல, ஒரு ஊரே உங்களைத் திட்டும்.
 

அதே வேளையில் ஒரு நாயால் பெனால்டி கோல் தடுக்கப்பட்டு உங்கள் வெற்றிவாய்ப்பு பறிபோனால்,எஸ் இதேபோல ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது. அது என்னவென்பதை இங்கே பார்ப்போம்.

 

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் புட்பால் அணிகள் சமீபத்தில் மோதின. இதில் போட்டியின் 72-வது நிமிடத்தில்  எதிரணிக்கு பெனால்டி கோல் அடிக்க வாய்ப்பொன்று கிடைத்தது.

 

எதிரணி வீரர்கள் பாலும், காலுமாக தயாராக நிற்க, மறுபுறம் கோல்கீப்பர் இந்த பந்தை எப்படியாவது பிடித்து ஹீரோவாகி விட வேண்டும் என காத்துக் கொண்டிருந்தார். அதேபோல எதிரணி வீரர் காலால், பந்தை எட்டி உதைத்தார். கோல் கீப்பரின் எதிர்பார்ப்புக்கு மாறாக பந்து வலைக்குள் சென்று விழப்போகும் நேரத்தில், சரியாக ஒரு நாய் ஒன்று கோல் போஸ்டுக்கு உள்ளே வர, பந்து நாயின் மீது பட்டு கோல் தடுக்கப்பட்டது.

 

அப்பாடா என்று கோல் கீப்பர் நிம்மதி பெருமூச்சு விட, எதிரணியினர் கொலைவெறியுடன் பெனால்டி ஷூட்டைத் தடுத்தது எந்த நாய்டா? எனத்தேட  இது எதையும் கண்டுகொள்ளாது அடிவாங்கி ஒரு டீமைக் காப்பாத்தியது கூடத் தெரியாமல் அந்த நாய் கத்திக்கொண்டே ஓடிவிட்டது.

FOOTBALL, DOG