'ரன் அவுட் பண்ணுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா'...இப்படியா வச்சு செய்யுறது...வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக்கில் வினோதமான பல சம்பவங்களுக்கு பஞ்சம் இருக்காது.அதே போன்ற நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.மெல்பெர்ன் ரெனெகேட்ஸுக்கும், சிட்னி தண்டர்ஸுக்கும் இடையேயான போட்டியின் ரன் அவுட் தற்போது வைரலாகியுள்ளது.

'ரன் அவுட் பண்ணுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா'...இப்படியா வச்சு செய்யுறது...வைரல் வீடியோ!

முதலில் பேட்டிங் செய்த மெல்பெர்ன் ரெனெகேட்ஸ் அணி அதிரடியாக விளையாடி 140 ரன்களை குவித்தது.அந்த அணி வீரர் முகமது நபி 2 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்தார்.அதன் பின்பு 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட துவங்கிய சிட்னி தண்டர்ஸ்,113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் சிட்னி தண்டர்ஸ் அணி பேட்டிங் செய்த போது,அந்த அணி வீரர்களான ஜொனாதன் குக் மற்றும் குரிந்தர் சாந்து ஆகிய இருவரும் ரன் எடுக்க ஓடும் போது,நடு பிட்சில் மோதி கொண்டார்கள்.இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தார்கள்.அப்போது பௌலிங் செய்த வீரர் பொறுமையாக பந்தை எடுத்து ரன் அவுட் செய்தார்.இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

CRICKET, TWITTER, BIG BASH, BIZARRE RUN-OUT