நெல்லை: பெட்ரோல் நிரப்பியதும் வாகனத்தில் பற்றிய தீ, வாகன ஓட்டி மீதும் பரவியதால் பரபரப்பு!
Home > தமிழ் newsபெட்ரோல் பங்குகளில் வாகனங்களில் பெட்ரோல நிரப்பும்போது செல்போன் பேசுவது, இணையத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் உண்டாகும் மின்னலைகள் பெட்ரொல் பங்கினையே தீப்பிடிக்க வைக்கும் அபாயத்துக்கு தள்ளிவிடும் என்பன போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் அவற்றை விழிப்புணர்வாக பலரும் கருதுவதில்லை.
திருநெல்வேலியில் தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் இந்த விழிப்புணர்வை பலருக்கும் சம்மட்டி அடி போல் உணர்த்தியுள்ளது. சிசிடிவி-யில் பதிவாகி, இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் ஒருவர் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு நகர முயற்சிக்கும்போது அவரது பைக்கின் பெட்ரோல் டேங்க் திடும்மென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது.
சற்றும் எதிர்பாராத அந்த வாகன ஓட்டி மீது தீ பரவத் தொடங்கவும், அவர் உடனே வண்டியை விட்டுவிட்டு பயத்தில் ஓடுகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயினை அணைக்க முயலுகின்றனர். உடலில் தீப்புண்களுடன் உயிருடன் தப்பிய அந்த வாகன ஓட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவத்தை பற்றியும் எதனால் தீப்பற்றியது என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிலநேரங்களில் டேங்க் ஃபில் செய்தாலும் இதுபோன்று நிகழ வாய்ப்புள்ளதாக பங்க்-கில் பணிபுரியும் சிலர் கூறியுள்ளனர்.