'பிக்பாஸ் வின்னர் இவர்தான்'.. பிரபல நடிகரின் கையால் ஷீல்டை வாங்கிய நடிகர்!

Home > தமிழ் news
By |
'பிக்பாஸ் வின்னர் இவர்தான்'.. பிரபல நடிகரின் கையால் ஷீல்டை வாங்கிய நடிகர்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரியவரும். அதே நேரம் தெலுங்கில் நானி நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வழியாக,ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை அடைந்த நடிகர் கவுசல் மந்தா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் கையால் பிக்பாஸ் போட்டியாளருக்கான ஷீல்டை கவுசல் பெற்றுக்கொண்டார். விருதை வென்று வீட்டைவிட்டு வெளியேறிய கவுசலுக்கு அவரது ரசிகர்கள் பலத்த வரவேற்பினை அளித்துள்ளனர்.

BIGGBOSS2TELUGU, KAUSALMANDA, NANI