'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்

Home > தமிழ் news
By |
'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் போட்டியாளர்கள் குறித்த விமர்சனங்கள் குறித்து கமல் பேசும்போது,''பலர் நட்சத்திரங்களாக மாறினார்கள். பலர் உங்கள் வீட்டில் ஒருவராக மாறினார்கள். விமர்சனங்கள்இருந்தது. அந்த விமர்சனங்கள் காலப்போக்கில் அவைகளே பதிலாக மாறிவிடும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்,'' என சொல்கிறார்.

 

பிக்பாஸ் போட்டியாளர்களான மும்தாஜ். மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் சமூக வலைதளங்களில், பெருவாரியான விமர்சனங்களுக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.