'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
Home > தமிழ் news
சமீபத்தில் நிறைவுக்கு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா ரன்னர் அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர்.ஜனனி ஐயர் 4-வது இடத்தைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மஹத், ஜனனி, ரித்விகா ஆகியோர் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.இதேபோல மஹத் ஐஸ்வர்யாவுக்கு நல்ல நண்பனாகத் திகழ்ந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் போட்டியாளர்கள் தங்களது நட்பைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக புகைப்படம் ஒன்றை ஜனனி ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் சிம்புவுடன் இணைந்து ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, மஹத் ஆகியோர் நேற்றிரவு செக்க சிவந்த வானம் படத்தைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் நல்ல நட்பு இப்படியே தொடருங்கள் என, அனைவரையும் பாராட்டியுள்ளனர்.