'பெண் பெயரில் பாலியல் அழைப்பு'.. ஆதாரத்துடன் பகிர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்!
Home > தமிழ் newsபெண் பெயரில் தனக்கு விடுக்கப்பட்ட பாலியல் அழைப்பு குறித்து பிக்பாஸ் 2 போட்டியாளரும், பண்பலைத் தொகுப்பாளருமான ஆர்ஜே வைஷ்ணவி தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். தற்போது அது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சமூக வலைதளங்களில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பெண் பெயரில் ஒருவர் வைஷ்ணவியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி இருக்கிறார். தான் சென்னை தாம்பரத்தில் வசித்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள அவர், நாம் ஏன் உறவு வைத்து கொள்ளக்கூடாது? என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி அந்த உரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"தன்பாலின உறவு தவறில்லை என பிரிவு 377 நீக்கப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற அழைப்புகள் அதிகரித்து வருகின்றன,'' என தெரிவித்துள்ளார்.
அதற்குக் கீழே கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் இது பெண் பெயரில் போலி அழைப்பு என்றும், இதற்கு நடவடிக்கை எடுங்கள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
I'm all for Section 377 being decriminalised but this escalated rather quickly. pic.twitter.com/yKteGcj2vm
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) October 23, 2018