'பிக்பாஸ் முடிந்தும் அன்பு குறையவில்லை'.. ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட டைட்டில் வின்னர்!
Home > தமிழ் news
தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முடிவுக்கு வந்தது. தமிழில் ரித்விகாவும், தெலுங்கில் கவுசல் மண்டாவும், மலையாளத்தில் சாபுமோனும் டைட்டிலை வென்றனர்.
இதில் தெலுங்கு வெற்றியாளர் கவுசல் தான் பரிசாகப் பெற்ற ரூ.50 லட்சத்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்தநிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவொன்றில் பங்கேற்க வந்த கவுசல் மண்டாவை அவரது ரசிகர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து கவுசல் மண்டா காரின் மீது ஏறிநின்று அவர்களுடன் உரையாடினார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Ee range following ante not a joke 👌🏻🙏🏻
— rMB (@iMaheshAdmirer) October 4, 2018
Pure Cult Army 💗@kaushalmanda 🤟🏻#KaushalManda #KaushalArmy 🔥 pic.twitter.com/XBsVo1aiah