பிக்பாஸ் வீட்டில் மஹத்,மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இந்த டாஸ்க்கின்போது மஹத்-பாலாஜி இடையே மோதல் ஏற்படுவது போல காட்சிகள் முன்னதாக வெளியாகின.

 

தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் 'இந்த கேம் ரொம்ப சீப்பா இருக்கு' என பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவி ரம்யா கூறுவது போலவும், பதிலுக்கு பிக்பாஸ் அவரைத் தலைமைப்  பொறுப்பிலிருந்து நீக்குவது போலவும் காட்சிகள் வெளியாகி இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டினர் 2 அணிகளாக பிரிந்துள்ளது போல காட்சிகள் உள்ளன. மேலும் இவ்வளவு நாள் நீங்க நடிச்சீங்களா? என்று யாஷிகா மும்தாஜைப் பார்த்து கேட்கிறார்.

 

இதனால் கமல் ஏற்கனவே கூறியது போல, பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS