'ஒருவரை முன்னால் விட்டு பின்னால் புறம் பேசாதே'.. பாலாஜிக்கு அட்வைஸ் வழங்கும் நித்யா!

Home > தமிழ் news
By |
'ஒருவரை முன்னால் விட்டு பின்னால் புறம் பேசாதே'.. பாலாஜிக்கு அட்வைஸ் வழங்கும் நித்யா!

முதல்  ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் வீட்டில் இருந்து, அவரது குடும்பத்தினர் வருவது போலவும் மும்தாஜ் பிரீஸ் நிலையில் இருக்கும்போதே அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால், அதனைக்கண்டு அவர் உடைந்து கதறுவது போல காட்சிகள்இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜிக்கு அவரது மகள் போஷிகா,மனைவி நித்யா இருவரும் கடிதம் அனுப்பியுள்ளது போல காட்டப்படுகிறது.

 

ஜனனி அதைப் படிக்கிறார் அதில், ''யாரைப்பற்றியும் முன்னால் விட்டு பின்னால் பேசாதே.இன்னும் ஒரு தோழியாக எனது ஆதரவினை உனக்கு அளித்து, உனது பக்கம் நிற்கிறேன்,'' என்று நித்யா தெரிவித்துள்ளார்.

 

அதேபோல அவரது மகள் போஷிகா, ''டியர் டாடி ஆல் தி பெஸ்ட்.வெற்றி பெற்று வாருங்கள்,'' என வாழ்த்தியுள்ளார்.இதைபடிக்கும் போது பாலாஜி அழ,சென்றாயன் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல காட்சிகள் உள்ளன.