எனக்கு 'ஹிட்லர் டாஸ்க்' தான் ரொம்ப புடிச்சது!

Home > தமிழ் news
By |
எனக்கு 'ஹிட்லர் டாஸ்க்' தான் ரொம்ப புடிச்சது!

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், மஹத்-விஜயலட்சுமி நம்மிடம் பேசுவது இல்லை என்று ஐஸ்வர்யாவிடம் புலம்புவது போல காட்சிகள் இருந்தன.

 

2-வது ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ்,டேனி, பாலாஜி,விஜயலட்சுமி ஆகிய நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயலட்சுமி, ''ஜென்ம விரோதி மாதிரி அடிச்சிக்கிட்டு, அடுத்த நிமிஷமே கட்டிப் பிடிச்சிக்கிறீங்க. நிகழ்ச்சியை பாக்குறவங்க ரொம்ப ஸ்டுப்பிட்டா பீல் பண்றாங்க,'' என்று கேட்டார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் உங்களுக்கு என்ன டாஸ்க் புடிச்சது என்று விஜியிடம் கேட்கின்றனர். பதிலுக்கு அவர், '' எனக்கு ஹிட்லர் டாஸ்க் தான் ரொம்ப புடிச்சது. ரொம்ப என்கேஜிங்கா இருந்தது என்கிறார்.

 

சரியாக அந்த சமயத்தில் டேனி,பாலாஜியைப் பார்த்து சிரிக்க இதனைப் பார்க்கும் பாலாஜி  என்ன ஏன்டா பார்த்து சிரிக்கிற? என்று டேனியைக் கேட்பது போல காட்சிகள் உள்ளன.