மும்தாஜிடம் வலுக்கட்டாயமாக 'வம்பிழுக்கும்' ஷாரிக்... வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
மும்தாஜிடம் வலுக்கட்டாயமாக 'வம்பிழுக்கும்' ஷாரிக்... வீடியோ உள்ளே!

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், சென்றாயன் கையில் உள்ள டீ கப்பை ஐஸ்வர்யா வலுக்கட்டாயமாக பிடுங்குகிறார்.இதனால் சென்றாயன்-ஐஸ்வர்யா இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. உச்சகட்டமாக சென்றாயன் கோபத்தில் கையை ஓங்குவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா குப்பையை தலையில் கொட்டும்போது பேசாமல் இருந்தது தவறு என பாலாஜியை,பொன்னம்பலம் கண்டிக்கிறார்.மறுபுறம் பிக்பாஸ் ராணியாக ஐஸ்வர்யாவிடம் சென்றாயன்-மும்தாஜ் இருவரும் மன்னிப்பு கேட்பது போல காட்டப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஷாரிக்,மும்தாஜிற்கு லிப்ஸ்டிக் போட முயற்சிப்பது போலவும் பதிலுக்கு  மும்தாஜ் அதைத்தடுக்க முயற்சிப்பது போலவும் காட்டப்படுகிறது. மேலும், ஷாரிக்கை அடிக்க மும்தாஜ் கையை ஓங்குவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.