பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக மமதி நேற்று வெளியேற்றப்பட்டார். இந்தநிலையில் இந்த வார நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் துவங்கியுள்ளது. இதில் மும்தாஜ்-ஜனனி பேரையும், ஜனனி-மும்தாஜ் பேரையும் நாமினேட் செய்கின்றனர். வைஷ்ணவி-மஹத் பேரை நாமினேட் செய்கிறார்.

 

இதனால் இந்த வாரம் வீட்டிலிருந்து யார் வெளியேறப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கமல் சொன்னது போல பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

முன்னதாக வெளியான ப்ரோமோவில் சென்றாயன், வைஷ்ணவி இருவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுவது போல காட்சிகள் இருந்தன. இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இந்த வாரம் நாமிநேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BY MANJULA | JUL 2, 2018 12:41 PM #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS