தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். 'வர்மா' என பெயரிடப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் துருவ்வின் ஜோடியாக பெங்காலி நடிகை மேகா சவுத்ரி நடித்து வருகிறார்.
இந்தநிலையில் 'பிக்பாஸ்' புகழ் ரைசா வில்சன் இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பாலா படத்தில் நடிப்பது குறித்து ரைசா கூறுகையில்,"பாலா சார் மிகவும் அற்புதமானவர்.ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவரிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். துருவ்வுடன் இணைந்து நடிப்பது மிகவும் எளிமையாக இருந்தது.மொத்தத்தில் இப்படத்தில் நடித்தது எனக்கு மிகச்சிறந்த அனுபவம்,'' என்றார்.
BY MANJULA | JUL 6, 2018 4:18 PM #VARMA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS