2018-ம் ஆண்டிற்கான 'பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள்' சென்னை ட்ரேட் சென்டரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் விருதை மெர்சல், வேலைக்காரன் படங்களுக்காக கலை இயக்குநர் முத்துராஜ்  வென்றார்.

 

இந்த விருதை நடிகர் விஜய் வசந்த் கையால் பெற்றுக்கொண்ட முத்துராஜ் விருது குறித்து பேசுகையில், "மெர்சல்,வேலைக்காரன் 2 படங்களுக்கும் நிறைய உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக 'மெர்சல்' படத்துக்காக நிறைய செட்டுகள் பிரமாண்டமாக அமைத்தோம். ஒளிப்பதிவாளர்கள் விஷ்ணு,முரளி இருவருக்கும் நன்றி,'' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

BY MANJULA | JUN 17, 2018 5:35 PM #BGM2018 #MERSAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS