தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாகத் திகழும் தளபதி விஜய், பிஹைண்ட்வுட்ஸ் 'கோல்டு மெடல்' விருதுகள் 2018-ன் 'பீப்பிள்ஸ் பிக்கஸ்ட் ஐகான் ஆப் தமிழ் சினிமா' விருதினை வென்றார்.

 

தளபதி 62 ஷூட்டிங் காரணமாக இந்த விருதினை நேரில் பெற்றுக்கொள்ள நடிகர் விஜய்யால் வர முடியவில்லை. அதனால் அவரின் வீடியோ தொகுப்பு ரசிகர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. விஜய் நேரில் வரவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் இந்த விருதினை கொண்டாடித் தீர்த்தனர்.

 

பிஹைண்ட்வுட்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 2,50,000-க்கும் மேலான வாக்குகள் விஜய்க்கு கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான மெர்சல் படம் சிறந்த கலை இயக்குநர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடன இயக்குநர் என விருதுகளைக் குவித்தது.

BY MANJULA | JUN 18, 2018 12:13 PM #VIJAY #THALAPATHY62 #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS