ஜூன் 17-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், சமூக மேன்மைக்கு பாடுபட்ட நான்கு உயரிய மனிதர்களுக்கு 'பிஹைண்ட்வுட்ஸ்' சார்பில் எமிநென்ஸ் விருதுகள் வழங்கப்பட்டது.

 

கோயமுத்தூர் மாவட்டம் ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவர் சண்முகம் அவர்கள் தனது அயராத உழைப்பால், சுமார் 850 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் காற்றாலை ஒன்றை நிறுவி தனது மொத்த கிராமத்திற்கும் இலவச மின்சாரம் அளித்து வருகிறார். இதுதவிர உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் விற்பனை செய்கிறார்.

 

திரு. சண்முகம் அவர்களின் 20 வருட சேவையைப் பாராட்டி தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் சார்பில் 'பிஹைண்ட்வுட்ஸ் எமிநென்ஸ் இன் சர்வீஸ் டூ மேன்கைன்ட்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி மற்றும் தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் சி.ஈ.ஓ அனுஷா ஆகியோரிடமிருந்து திரு.சண்முகம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

விழாவில் அவர் பேசுகையில், "ஓடந்துறை(கோயமுத்தூர்) கிராமத்துல 20 ஆண்டுகாலம் ஊராட்சி மன்றத்தலைவரா இருந்தேன். குடிசை இல்லாத கிராமம் எங்களோடது. 850 வீடுகளுக்கு மேல இதுவரை கட்டிக்கொடுத்து இருக்கேன். எங்க ஊரு பஞ்சாயத்துக்கு தேவையான மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்றோம். பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கி வறுமையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

 

என்னுடைய சேவைக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர்களின் கையால் விருதுகள் வாங்கி இருக்கேன்.வருகின்ற காலத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத ஊழலற்ற இந்தியாவை இளைஞர்களாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.

 

விழாவில் திருமதி.மலர்க்கொடி தனசேகரன், திரு.எஸ்.ஆர்.ஜாங்கிட் மற்றும் திரு.பாலம் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கும் எமிநென்ஸ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

BY MANJULA | JUN 21, 2018 3:40 PM #BEHINDWOODSEXCLUSIVE #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS