ஜூன் 17-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், சமூக மேன்மைக்கு பாடுபட்ட நான்கு உயரிய மனிதர்களுக்கு 'பிஹைண்ட்வுட்ஸ்' சார்பில் எமிநென்ஸ் விருதுகள் வழங்கப்பட்டது.

 

தன்னலமற்ற இதயம்,நிபந்தனையற்ற அன்புக்கு சொந்தக்காரராகத் திகழும் திரு.பாலம் கல்யாணசுந்தரம்(76) தான் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த மொத்த பணத்தையும் நன்கொடைகளுக்காகவே செலவிட்டவர். ஓய்வுக்குப்பின் பத்திரிக்கை நடத்தியும், சிறுசிறு வேலைகள் செய்தும் அறக்கட்டளை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தையாக தத்தெடுத்துக் கொண்ட திரு.பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு, தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் சார்பில் 'பிஹைண்ட்வுட்ஸ் எமிநென்ஸ் இன் சர்வீஸ் டூ மேன்கைன்ட்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோரிடமிருந்து திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

விழாவில் அவர் பேசுகையில், "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.இவர் ரொம்ப நேர்மையான மனிதர். இவர் நல்லதைச் செய்வார் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்தேன்.நடிகர் சிவக்குமார் தொடர்ந்து என்னைப்பற்றி எழுதியதால் தான் நான் வெளியுலத்துக்கு தெரிய வந்தேன்.எங்க ஊரு சின்ன கிராமம். சாலைவசதி, மின்சார வசதி கிடையாது. நான் கல்லூரிக்கு வந்தபிறகு தான் சாலை, மின்சாரம் எல்லாமே பார்த்தேன்.

 

பணம் நெறைய வந்தா சந்தோஷமா இருக்கலாம்னு எங்க அம்மாகிட்ட ஒருதடவ சொன்னேன்.அப்போ எங்க அம்மா பேராசை கொள்ளாதே, தானம் செய், தினம் ஒரு உயிருக்கு உதவி செய் என்று எனக்கு ஒரு மூன்று வழிகள் சொல்லிக்கொடுத்தாங்க. இதுபோல ஆயிரக்கணக்கான விருதுகள் வாங்கி இருக்கிறேன். உலகின் நல்லிணம் படைத்த மனிதர் என்ற விருதை வென்றுள்ளேன்.

 

20-ம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர் என்ற விருதை ஐக்கிய நாடுகள் சபை எனக்கு அளித்தது. உலகத்தில் 50 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.30 கோடி மதிப்பிலான 'மேன் ஃஆப் தி மில்லியன்' விருதை பெற்றுள்ளேன். இது எல்லாவற்றுக்கும் காரணம். எனது அம்மா சொல்லிக்கொடுத்த பாடம்தான்.எது கிடைத்தாலும் பேராசைப்படாமல் இருங்கள். தினம் யாருக்காவது உதவி செய்யுங்கள். ராஜா போல ராணி போல வாழலாம்,'' என்றார்.

 

விழாவில் திருமதி.மலர்க்கொடி தனசேகரன், திரு.எஸ்.ஆர்.ஜாங்கிட் மற்றும் திரு.சண்முகம் ஆகியோருக்கும் எமிநென்ஸ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

BY MANJULA | JUN 21, 2018 3:30 PM #BEHINDWOODSEXCLUSIVE #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS