ஜூன் 17-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், சமூக மேன்மைக்கு பாடுபட்ட நான்கு உயரிய மனிதர்களுக்கு 'பிஹைண்ட்வுட்ஸ்' சார்பில் எமிநென்ஸ் விருதுகள் வழங்கப்பட்டது.

 

விழாவில் விடாமுயற்சியின் மொத்த உருவமாகத் திகழும் திருமதி. மலர்க்கொடி தனசேகரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் மேலமருகனூர் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மலர்க்கொடி தனது கிராமத்தில் உள்ள சுமார் 650 வீட்டினருக்கும், அரசு உதவியுடன் கழிவறைகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் பிளாண்ட் மூலம், தொடர்ந்து தண்ணீர் பாயச்செய்த பெருமையும் இவரையே சேரும்.

 

தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்து தனது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டிய திருமதி மலர்க்கொடிக்கு, தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் சார்பில் 'பிஹைண்ட்வுட்ஸ் எமிநென்ஸ் இன் சர்வீஸ் டூ மேன்கைன்ட்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி மற்றும் தி பார்க் குரூப் ஃஆப் இன்ஸ்ட்டியூஷன்ஸ் சி.ஈ.ஓ அனுஷா ஆகியோரிடமிருந்து திருமதி.மலர்க்கொடி பெற்றுக்கொண்டார்.

 

விழாவில் அவர் பேசும்போது, "எல்லோருக்கும் வணக்கம் சிவகங்கை மாவட்டத்துல ரொம்ப பின்தங்கிய கிராமம் என்னோடது. எங்க மக்கள் கிட்ட வசதி வாய்ப்பு எதுவும் இல்ல.நான் பிரசிடெண்ட் ஆனவுடனே முதல் விஷயமா எங்க ஊருக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தேன். சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தேன்.கூரை வீடே இல்லாத கிராமமா எங்க ஊரை மாத்தி இருக்கேன். பொதுவா எங்க ஊருக்கு அதிகாரிகள் யாரும் வர மாட்டாங்க.ஆனா நான் பிரசிடெண்ட் ஆனதுக்கு அப்புறம் நிறைய அதிகாரிகள் எங்க ஊருக்கு வர ஆரம்பிச்சி இருக்காங்க. இந்த விருதை எங்கள் ஊர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.

 

தொடர்ந்து தன்னுடைய சாதனைகளுக்கு தோள் கொடுப்பது தனது கணவர்தான் என்று தெரிவித்த மலர்க்கொடி, தனது கணவரை மேடைக்கு அழைத்து தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

 

விழாவில் திரு.சண்முகம், திரு.எஸ்.ஆர்.ஜாங்கிட் மற்றும் திரு.பாலம் கல்யாணசுந்தரம் ஆகியோருக்கும் எமிநென்ஸ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

BY MANJULA | JUN 21, 2018 3:17 PM #BEHINDWOODSEXCLUSIVE #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS