2018-ம் ஆண்டின் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் விழாவில், பாகுபலி படத்தில் தேவசேனாவாக அசரடித்த அனுஷ்கா சிறந்த நடிகை விருதினை வென்றார்.

 

இதேபோல சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் விருதினை ரமா ராஜமௌலி-பிரசாந்தி திப்பினேனியும், சிறந்த துணை நடிகை விருதினை ரம்யா கிருஷ்ணனும் வென்றனர். ஏவிஎம் நிறுவனம் சார்பில் 'தி விஷனரி ஃஆப் இந்தியன் சினிமா' விருது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு வழங்கப்பட்டது.

 

விருது வென்றது குறித்து விழாவில் நடிகை அனுஷ்கா பேசுகையில், "பாகுபலி படத்தின் தேவசேனா கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த ராஜமௌலி சாருக்கு நன்றி. ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மீண்டுமொரு முறை நன்றி,'' என்றார்.

 

அவரிடம் பாகுபலி பிரபாஸின் தோள்களில் ஏறி நடந்தது சரியா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுஷ்கா, ''ஒருவரின் தோளில் நடப்பது தவறு. ஆனால் பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்துக்காக அப்படி நடித்ததில் தவறில்லை,'' என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

BY MANJULA | JUN 18, 2018 3:18 PM #ANUSHKASHETTY #BGM2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS