Looks like you've blocked notifications!

பாரிஸ் நகரில் தொடங்கி பெல்ஜியம் எல்லையில் உள்ள ரூபெய்க்ஸ் வரை நடைபெறும் சைக்கிள் பந்தயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

 

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில், வெராண்டா வில்லியம்ஸ் அணி சார்பில் பெல்ஜியத்தைச் சேர்ந்த மைக்கேலும் (23) கலந்து கொண்டார்.    

 

போட்டித் தொடங்கியதும் வேகமாக பயணிக்கத் தொடங்கிய மைக்கேல், திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10:40 மணியளவில் மைக்கேல் உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவு சைக்கிள் பந்தய வீரர்களுக்கும், அணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BY SATHEESH | APR 9, 2018 11:04 AM #DEATH #BELGIANCYCLIST #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS