இந்த வயசுலயும் 'ஹெலிஹாப்டர்ல' போகாம தரையில போறாரு?

Home > தமிழ் news
By |
இந்த வயசுலயும் 'ஹெலிஹாப்டர்ல' போகாம தரையில போறாரு?

6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் தற்போது சென்னை டிரேட் செண்டரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

 

இதில் பல்வேறு தருணங்களில் சமூகத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு, பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் விருது வழங்கப்பட்டது.

 

ஐகான் ஆப் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இன் சினிமா-ராகவா லாரன்ஸ்

 

நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் 'ஐகான் ஆப் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இன் சினிமா' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட லாரன்ஸிடம் கஜா புயலுக்காக ரூபாய் 5 லட்சம் (பிஹைண்ட்வுட்ஸ்+சரவணா செல்வரத்தினம்) வழங்கப்பட்டது. இத்துடன் லாரன்ஸ் அவர்கள் ரூபாய் இரண்டரை லட்சம் வழங்கினார். மொத்தம் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கஜா புயலுக்காக வழங்கப்பட்டது. 

 

ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்-சகாயம் ஐஏஎஸ்

 

'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன் விருது' சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் பேசும்போது,''தமிழகத்தில் நான் முதன்முறையாக மேடையில் பெறும் விருது தான். இதுவரை நான் சுமார் 25 முறை நான் பணியிட மாறுதல் பெற்று இருக்கிறேன். அது ஒவ்வொன்றையும் நான் விருதாகவே கருதுகிறேன்.மக்கள் பாதையில் மக்களை தலைமையேற்று நடத்தக்கூடிய காலம் விரைவில் வரும்.
தமிழ்நாட்டு முதல்வருக்கு நேர்மை அவசியமாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்,''என்றார்.


ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்-நக்கீரன் கோபால்

 

'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருது நக்கீரன் கோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து அவர் பேசும்போது, ''இந்த மேடைக்கு வர எனக்கு 30 வருஷம் ஆச்சு.வாழுகின்ற பெரியாரிடம்(நல்லகண்ணு)இந்த விருதை நான் வாங்குவதில் நான் பெருமை அடைகிறேன். என் மீசையைக் காப்பாற்ற நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.ஒரு 269 எப்ஐஆர் வழக்கு என்மேல இருக்கு, 4 மர்டர் வழக்கு, 1 பொடா வழக்கு அப்புறம் கவர்னர் போட்ட ஒரு வழக்கு என்மேல இருக்கு.

 

இதையெல்லாம் தாண்டி நான் வரணுமா? ஒரு 700 வருடங்கள் ஆகும். ஆனால் இவற்றை தாங்கி வாழும் வலிமையை எனக்கு இதுபோன்ற விருதுகள் அளிக்கின்றன. நாளைக் காலையில வரலாம். இல்ல வெளில போனவுடனே வரலாம் என்றார். மேலும் இந்த வயசுலயும் ஹெலிகாப்டர்ல போகாம தரையில போறாரு? என நல்லகண்ணு அவர்களை, நக்கீரன் கோபால் வாழ்த்தினார்.

BEHINDWOODSEXCLUSIVE, BEHINDWOODSGOLDMEDALS2018