சென்னை 'சேப்பாக்கத்தில்' டி-20 கிரிக்கெட்.. அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ!

Home > தமிழ் news
By |
சென்னை 'சேப்பாக்கத்தில்' டி-20 கிரிக்கெட்.. அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள, டி-20 கிரிக்கெட் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது.இதைத் தொடர்ந்து ஆசியக்கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளது.இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

 

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து,2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

 

அதன்படி முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை டி-20 போட்டிகள் நடைபெறுகிறது.

 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

MSDHONI, VIRATKOHLI, CHEPAUKSTADIUM