'ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி':இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
Home > தமிழ் newsஆஸ்திரேலியவிற்கு எதிரான முதல் 20 ஓவர்கள் போட்டியானது இன்று நடைபெறுகிறது.இதற்கான வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவுடன் 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இதில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்களின் முதல் போட்டியானது இன்று நடைபெற இருக்கிறது.கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினை எதிர்கொள்கிறது.இதற்காக 12 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, சேஹல்.
ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்வதற்காக இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
<We've announced our 12 for the 1st T20I against Australia at The Gabba #TeamIndia pic.twitter.com/c6boLtieGf
— BCCI (@BCCI) November 20, 2018