'வங்கிகளின் திடீர் ஸ்டிரைக் மற்றும் தொடர் விடுமுறை'...எத்தனை நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கப்பட போகிறது?
Home > தமிழ் newsபொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கோரியும் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள இந்த வேலை நிறுத்தத்தால்,பொதுத் துறை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒரு குடையின் கீழ் இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இதற்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு,வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.இந்நிலையில் இன்று வங்கி அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.ஆனால் தனியார் துறை வங்கிகள், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பதால், அதன் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.
வேலை நிறுத்தம் குறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ரவிந்தர் குப்தா கூறுகையில் " 3 வங்கிகள் இணைப்பால், வேலையிழப்பு ஏற்படுவதோடு,தனியார் வங்கிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடும்.மேலும் வருவாயை கணக்கில் கொள்ளாமல், குறைந்தபட்ச சம்பளத்தை அனைத்து வங்கிகளும் உறுதி செய்ய வேண்டும்']என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
- டிசம்பர் 21: வங்கி அதிகாரிகள் சங்கம் ஸ்டிரைக்
- டிசம்பர் 22: நான்காவது சனிக்கிழமை விடுமுறை
- டிசம்பர் 23: ஞாயிற்றுக் கிழமை விடுமுறை
- டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் விடுமுறை
- டிசம்பர் 26: வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்டிரைக்