தாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்!

Home > தமிழ் news
By |
தாலி, மெட்டி அணிய தடை .. கழட்டிவிட்டு தேர்வு எழுதிய பெண்கள்!

பொதுவாக பலர் திருமணத்துக்கு பிறகும் படிப்பது உண்டு. அதுவும் நம் ஊர்களில பள்ளி வயதிலேயே திருமணம் செய்துகொண்டு பள்ளிக்கு வரும் பெண்கள் எல்லாம் இருக்கின்றனர். ஆனால் அண்மையில் தெலங்கானாவில் நடைபெற்ற அரசுத் தேர்வு ஒன்றில் பெண்கள் தாலி மற்றும் மெட்டி உள்ளிட்ட சடங்குக் குறியீடுகளை அணிந்து சென்று தேர்வு எழுதுவதற்கான அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் கல்வி அமைப்பினால், முன்பை விட இப்போது படிக்கும் பருவத்திலேயே திருமணம் செய்துகொள்ளும் பள்ளி மாணவிகள் குறைந்து வருகின்றனர்.

 

தெலங்கானாவில், மெடாக் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற பெண்கள், தங்கள் கழுத்தில் தாலி மற்றும் காலில் மெட்டி முதலானவற்றை அணிய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, அவற்றை கணவன்மார்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். சிலர் தத்தம் சம்பிரதாய நம்பிக்கைகள் நசுக்கப்படுவதாக, கொதித்து பேசவும் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இதேபோல் முன்னதாக மருத்துவ தேர்வுகளில் மாணவிகள் கையில் கட்டியிருந்த கடவுள் வழிபாட்டு அடையாளக் கயிறுகளை கழட்டிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

EXAM, TELANGANA, INDIA, RITUALS, WOMENS, EXAMS