சென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்!
Home > தமிழ் newsஅடுத்து வரும் காலம் ரோபோக்களின் காலம் என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் இரண்டு ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
விமானம் புறப்படும் நேரம், பாதுகாப்பு சோதனைகள், டிக்கெட் பரிசோதனை உள்ளிட்ட விவரங்களுக்கு; பயணிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு இந்த ரோபோக்கள் பதில் அளிக்குமாறும் தன்னிச்சையாக இயங்கும்படியாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
சோதனை அடிப்படையில் இரண்டே இரண்டு ரோபோக்கள் மட்டும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்அமர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒரு ரோபோ முகப்பிலும், இன்னொரு ரோபோ புறப்பட்டு நிலையத்திலும் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளன. இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தினமான நேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி இந்த ரோபோக்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இதேபோல் ரோபோக்கள் பெங்களூரு விமான நிலையத்திலும் அமர்த்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி இதுபற்றி கூறுகையில், ’பரிசோதனை அடிப்படையில் இந்த ரோபோக்கள் பணிபுரிவதாகவும் விரைவில் நிறைய ரோபோக்கள் விமான நிலையங்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவை பயணிகளின் மொழிக்கு தகுந்தாற்போல் அவர்களிடம் பேசி அவர்களுக்கு வழி காட்டவும் வழிநடத்தும் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தகவலை சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது பெருமைக்குரிய விஷயம் என்று விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்.