Alaya BNS Banner
Kayamkulam Kochunni BNS Banner
Aan Devadhai BNS Banner

'தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த வீரர்'.. சூப்பர்மேனாகக் கொண்டாடும் ரசிகர்கள்!

Home > தமிழ் news
By |
'தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த வீரர்'.. சூப்பர்மேனாகக் கொண்டாடும் ரசிகர்கள்!

தன்னை தாண்டிச்சென்ற பந்தை அந்தரத்தில் தாவிப்பிடித்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாமை, ரசிகர்களை சமூக வலைதளங்களில் வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.

 

துபாயில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482 ரன்களும், ஆஸ்திரேலியா 202 ரங்களும் எடுத்திருந்தன.

 

நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு,182 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.தொடர்ந்து தனது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 135.9 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து, டெஸ்ட் போட்டியை டிரா செய்தது.

 

இதில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின்  வீரர் மிட்செல் ஸ்டார்க் அடித்த பந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை தாண்டிச்சென்றது. பந்து தாண்டிச்செல்வதைக் கவனித்த பாபர் சற்றும் யோசிக்காமல் சட்டென்று ஜம்ப் செய்து வலது கையால் அந்த பந்தை அருமையாக 'கேட்ச்' செய்தார்.இதனால் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

 

பாபரின் இந்த கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக புகழப்பட்டு வருகிறது. ரசிகர்கள் சூப்பர்மேன் என அவரை சமூக வலைதளங்களில்  கொண்டாடி வருகின்றனர்.

 

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 16-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது.

CRICKET, PAKISTAN, AUSTRALIA