களத்தில என்ன யாராவது சீண்டினா?.. புஜாரா என்ன சொல்றார் கேளுங்க!

Home > தமிழ் news
By |
களத்தில என்ன யாராவது சீண்டினா?.. புஜாரா என்ன சொல்றார் கேளுங்க!

அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் புஜாராவின் சதத்தால்(123) இந்திய அணி 250/9 என, ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.

 

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த புஜாரா,''நான் களத்தில் இருக்கும்போது எதிரணியினர் என்னை சீண்டினால் அதனை உத்வேகமாக எடுத்துக் கொள்வேன். அதேபோல தொடர்ந்து விளையாடுவேன். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

 

நான் களத்தில் வெகுநேரம் இருந்ததால் பந்து எப்படி வந்தது? என்பது எனக்குத் தெரியும். களத்தின் தன்மை குறித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தெரிவிப்பேன். இது ஒன்றும் மோசமான ஸ்கோர் இல்லை,''என்றார்.

CRICKET, #AUSVSIND, CHETESHWARPUJARA