'மாஸ் பௌலிங்'...'இந்தா வந்துட்டான்யா குட்டி பும்ரா'...வைரலாகும் சிறுவனின் பந்துவீச்சு வீடியோ!

Home > தமிழ் news
By |

அறிமுகமான முதல் வருடத்திலேயே தனது அசத்தலான பந்து வீச்சால் பல ஜாம்பவான்களின் பாராட்டை பெற்றவர் பும்ரா. ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக பந்து வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதுமட்டுமில்லாமல், இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.அதோடு அறிமுகமான வருடத்திலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.

 

'மாஸ் பௌலிங்'...'இந்தா வந்துட்டான்யா குட்டி பும்ரா'...வைரலாகும் சிறுவனின் பந்துவீச்சு வீடியோ!

நான் எதிர்கொள்ள பயப்படும் ஒரே பௌலர் பும்ரா தான் என,இந்திய கேப்டன் விராட் கோலி பும்ரா குறித்து பெருமைப்பட கூறியுள்ளார்.பும்ரா பந்து வீசும் விதம் சற்று வித்தியாசமானதாகும்.அவரின் பந்துவீச்சை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் கொண்டாட துவங்கியுள்ளனர்.ஆஸ்திரேலிய சிறுவன் ஒருவன்  தனது வீட்டில் பும்ராஹ்வை போலவே பந்துவீசி அசத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சிறுவனின் வீடியோவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2034ம் ஆண்டு தொடர் இப்படிதான் இருக்கும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தது. மேலும் சிறுவன் பந்து வீசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பும்ரா அந்த சிறுவன் அழகாக பந்துவீசிகிறான். வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

CRICKET, JASPRIT BUMRAH, AUSTRALIA