10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி!

Home > தமிழ் news
By |

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் ஒன்றில் சவுத் ஆஸ்திரேலிய அணி வெறும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி!

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதைவிட ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணியின் சாதனையை முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் ஓவல் மைதானத்தில் சவுத் ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் ஆஸ்திரேலியா என்கிற இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து இறங்கிய சவுத் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட்டாகிக்கொண்டே இருக்க, 10.2 ஓவரின் முடிவில் வெறும் 10 ரன்களில் சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக 4 ரன்களை சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை மன்சல் எடுத்து இருந்தார். சொல்லப்போனால் அவர்மட்டும் தான் ரன் எடுத்து இருக்கிறார். மீதி 6 ரன்களும் நியூ சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணியினரின் பந்து வீச்சில் 6 வொய்டு சென்றதால் எக்ஸ்ட்ராஸ் முறையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூ சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணி 2.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றி பெற்றது. இந்த 2 விக்கெட்டுகளையும் சவுத் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை மன்சல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

AUSTRALIA, CRICKET, WOMEN