மெர்சலைத் தொடர்ந்து எனது 'அடுத்த படம்' இதுதான்; அட்லீ

'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம் எது? என்பதைத் தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் அட்லீ தனது அடுத்த படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்பதியில் இன்று அவர் அளித்த பேட்டியில், "எனது அடுத்த படத்தை தமிழில் இயக்குகிறேன். அதற்கு அடுத்து தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளேன். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.

 

விஜய்-அஜீத் இருவரையும் வைத்து படம் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக என, அட்லீ பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAY 15, 2018 4:20 PM #ATLEE #MERSAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS