ஜோர்காட் மாவட்டம்(அசாம்) எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்த திலீப் டே(50) என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இறந்த திலீப்புக்கு உடல் ஊனமுற்ற உறவினர் மட்டுமே இருந்ததால், இறுதிச்சடங்கு எப்படி செய்வது என பரிதவித்துள்ளார்.
இதனைக்கண்ட அவரின் அண்டை வீட்டுக்காரர் ஜோர்காட் தொகுதி எம்.எல்.ஏ ரூப்ஜோதி குர்மி(40) என்பவரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த குர்மி, திலீப்பின் உடல் ஊனமுற்ற உறவினருடன் இணைந்து இறுதிச்சடங்குகளை மேற்கொண்டார்.
பின்னர் அவரது உடலை மூங்கில் பாடையில் கிடத்தி சுடுகாட்டுக்கு சுமந்து சென்று, இறுதிவரை இருந்து அவரின் இறுதிச்சடங்குகளை குறைவின்றி முடித்து வைத்துள்ளார். எம்.எல்.ஏ-வின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
BY MANJULA | JUN 2, 2018 10:34 AM #ASSAM #MLA #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Bill passed to hike MLA’s salary by 91%
- Phone call allowance for MLA’s to be increased this much
- Bus strike effect: TN MLA becomes driver