18 ஆயிரம் ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் அதிகாரி!

Home > News Shots > தமிழ் news
By |

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் திருமணம் என்பது மிக முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.

18 ஆயிரம் ரூபாய் செலவில் மகனின் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் அதிகாரி!

கொண்டாட்ட மனநிலையில், உறவுகள் கூடி மணமக்களுக்குள் அதிகாரப் பூர்வமான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவர்களை வாழ்க்கை பந்தத்தில் இணைக்கும் அதிமுக்கியமான சடங்காக திருமணம் உள்ளது. இதற்கு செலவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பவர்கள் பலர். ஆனாலும் தற்போதைய நவீனகால இளைஞர்கள் பலரும் ஒரு திருமணத்துக்காக இத்தனை ஆடம்பர செலவுகள் அவசியமா என்று செலவுகளை குறைப்பது உண்டு.

எனினும் நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்த குடும்பத்தினரே கௌரவம், அடுத்த வீட்டுக்காரரின் வாய்ச்சொல் முதலானவற்றுக்கு பயந்து கடன் வாங்கியாவது கல்யாணத்தை பண்ணும்போது, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை ரூ.36,000 ரூபாயில் செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பட்னாலா பசந்த் குமார் என்பவர்தான் தனது மகனின் திருமணத்தை இத்தகைய எளிமையான செலவுகளுடன் ஆடம்பரமின்றி கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நடத்தியுள்ளார். இதில் கலந்துகொண்ட தெலங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் மணமக்களை மனதார வாழ்த்தினார்.

ஆனால் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகிய அப்பா, தனது மகனின் திருமணத்தை பந்தாவாக அதிரிபுதிரி செலவுகளைச் செய்து பண்ணாமல், ரூ.36,000 செலவு செய்து திருமணம் செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால், இந்த செலவை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இணைந்து ஆளுக்கு சரிபாதியாக ஏற்று செய்துள்ளனர். ஆக, ஐஏஎஸ் அதிகாரி தன் மகனுக்கு செலவு செய்தது ரூ.18,000 தான். இதே போல் கடந்த வருடம் தனது மகளின் திருமணத்தை ரூ.16,000 செலவில் முடித்தவர் இந்த ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

MARRIAGE, MONEY, IASOFFICER