WATCH VIDEO: 'ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்கள்'...3 முறை ஸ்டம்ப்களை பறக்கவிட்ட அதிரடி பௌலர்!
Home > தமிழ் newsகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரரான அங்கித் ராஜ்பூத் ஒரே இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் ரஞ்சி டிராஃபி உள்ளூர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இதில் எலைட் குரூப் ‘சி’ பிரிவு போட்டி ஒன்றில் உத்தரப் பிரதேச அணியும், திரிபுரா அணியும் மோதின.இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப் பிரதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 552 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.அந்த அணியின் சார்பில் அக்ஷீத் நாத் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் சதம் அடித்தனர்.பிரியம் கார்க் என்ற வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய திரிபுரா அணி முதல் இன்னிங்சில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ‘பாலோ ஆன்’ பெற்ற திரிபுரா அணி, 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.அப்போது உத்தரப் பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் அங்கீத் ராஜ்பூத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், திரிபுரா அணி 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது. இதன்மூலம், உபி அணி இன்னிங்சிஸ் மற்றும் 384 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கீத் ராஜ்பூத் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும், ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அங்கீத் ராஜ்பூத்தை தக்க வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.