’கவலைப்படாத..இனி நீ தனி இல்ல’.. ஆணவக்கொலையை எதிர்த்து அம்ருதாவின் போராட்டம்!
Home > தமிழ் newsதெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே அவரது கணவனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் பிரனய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, நேற்று ஃபேஸ்புக்கில் 'பிரனய்க்கு நீதி' என்ற பிரச்சார பக்கத்தைத் தொடங்கினார்.
திங்கட்கிழமை மதியம் அம்ருதா இந்தப் பிரசாரப் பக்கத்தைத் தொடங்கினார். அதில், ''கவலைப்படாதே பிரனய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்'' என்று எழுதியிருந்தார்.தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 64 ஆயிரம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.பல மக்களும் தங்களின் ஆதரவு கருத்துக்களை அந்த பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் #SayNoToCaste என்ற ஹேஷ்டேக் திங்கட்கிழமை மாலை 6 மணி வாக்கில் ட்ரெண்ட் ஆனது.தொடர்ந்து பலபேர் ஆணவ படுகொலைக்கு எதிராக தங்களின் கருத்துக்களை இந்த ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்ருதா ''சமூக அநீதிக்கு எதிராக நான் மேற்கொண்டுள்ள முதல் நடவடிக்கை இது'' மேலும் பிரனய்யின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.