எல்லையில் வீர மரணம் அடையும் ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கும், விவசாயிகளுக்கும் 2 கோடி ரூபாய் நிதியளிக்க நடிகர் அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளார்.

 

எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடியும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.1 கோடியும் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆமாம். என்னால் முடியும், நான் விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

 

தகுதி வாய்ந்தவர்களுக்கு இந்த உதவித்தொகைகள் போய்சேரும்விதமாக அதிகாரபூர்வ அமைப்புகளை பட்டியலிட்டுத் தர ஒரு குழுவையும் அமிதாப் நியமித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஏராளமான தகவல்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

 

அமிதாப்பின் இந்த செயலை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

 

BY MANJULA | JUN 14, 2018 6:15 PM #INDIANMILITARY #AMITABHBACHCHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS