1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அவதூறு வழக்கு தொடர்ந்த அலோக் நாத்!
Home > தமிழ் news90-களின் புகழ்பெற்ற் வடமாநில சீரியல்தான் ’தாரா’. இந்த சீரியலில் நடித்தவர் அலோக் நாத். இவர் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மேற்கண்ட சீரியலின் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான விண்டா நண்டா தற்போது உருவான மீடூ புரட்சியின்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகை சந்தியா மிருதுல் மற்றும் தீபிகா அமின் உள்ளிட்டோர்களும் அலோக் நாத் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இந்தி நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனுஷ்ரீ தத்தா பதிவிடும்பொழுது உருவானதுதான் இந்திய மீடூ இயக்கத்தின் கண்காணிப்பு. அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இதில் சிக்கினர்.
இந்த நிலையில், நடிகர் அலோக் நாத் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக எழுத்தாளர் விண்டா மீது பரபரப்பு வழக்கினை பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக ஒரு மன்னிப்பு கடிதத்தையும், 1 ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தியுள்ளார். இதேபோல், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் தன் மீது பாலியல் குற்றத்தை புகுத்தியதற்காக பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.